Saturday, January 15, 2022

Qகல்பை (உள்ளத்தை) ஒருமுறை
கண்ணீரால் கழுவிக்கொள்வோமா?

சிரியா புகைப்படம் 
"வாழ்கையின் கஷ்டங்கள் (Hardship of Life)" 

சியெனா சர்வதேச புகைப்பட விருதுகளில் 
ஆண்டின் மிகச் சிறந்த புகைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது.

சிரியாவின் இத்லிப் நகரில் 
ஒரு குண்டுவெடிப்பில் 
வலது காலை இழந்த சிரியாவைச் சேர்ந்த தந்தை முன்ஸிர் (Munzir) 
தனது இளம் மகன் முஸ்தபாவை (Mustafa) 
தூக்கிக் காற்றிலே குலாவுவதைப் 
படம் காட்டுகிறது.

நரம்புகளைத் தாக்கும் வாயுத் தாக்குதலொன்றால்
பாதிக்கப்பட்ட அவரது தாயார் ஸெய்னப் (Zeynep)
அதற்காக அவர் எடுக்க எடுக்கவேண்டியிருந்த மருந்துகளால் 
ஏற்பட்ட பக்கவிளைவு/கோளாறு காரணமாகவே
முஸ்தபா (Mustafa) 
கீழ் மற்றும் மேல் அவயவங்கள் இல்லாமல் பிறந்தார்.

📷 மெஹ்மத் அஸ்லான் (Mehmet Aslan).
Source: OnePath Network (Fb).
.
.
லா ஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்.

அழாமல் எழுத முடியவில்லை. 😭
இந்தப் புகைப்படமும் 
நமது Qகல்பிலே (உள்ளத்திலே) 
சூடேற்றவில்லை என்றால்
நமது கண்களில் 
சூடான கண்ணீரை 
வழிந்தோடச் செய்யவில்லை என்றால்
அதனால், 
நமது இனிவரும் வாழ்க்கை முறையில் 
மாற்றம் செய்யத் தூண்டவில்லை என்றால் ..

நம்மைவிட மகா துரதிஷ்டசாலிகள் 
வேறு யார் தான் இருக்க முடியும் !

அர்ரஹ்மானிர் ரஹீம் ❤️
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
25.10.2K21, திங்கள்.

No comments:

Post a Comment