பிரார்த்தனைகள் 🤲 பலனளிக்காமைக்கான
பத்துக் காரணங்கள் ❤️
அழகான ஒரு வரலாறு.
ஆழ்மனதில் நிற்பதே பெரும்பேறு.
இப்ராஹிம் எதம் (ரஹ்) (Ibrahim Etham - R)
அவர்கள் ஒரு நாள் பஸ்ராவுக்குச் சென்றபோது...
மசூதி முற்றத்தில் ஒன்றுகூடிய
அவரை அறிந்தவர்கள் ...
"ஓஹ் ஹஸ்ரத் அவர்களே !
நாங்கள் தொடர்ந்து தொழுது, பிராத்தனை செய்தாலும்
எங்கள் பிரார்த்தனைகள் ஏன் பதிலளிக்கப்படுவதில்லை?
தயவுசெய்து என்ன காரணம் என்று சொல்லுங்கள்?"
என்று கேட்டார்கள்.
"முதலில்,
இறைவனை நம்புகிறோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
ஆனால், அவனுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிவதில்லை."
"இரண்டாவது,
அல்குர்ஆனை நீங்கள் படித்திருக்கிறீர்கள்.
ஆனால், அதன் போதனைகளுக்கு ஏற்ப நீங்கள் வாழவில்லை."
"முஹம்மத் நபி (ஸல்) அவர்களை
நாம் நேசிக்கிறோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
"ஆனால், அவரை வழிகாட்டியாக நீங்கள் பின்பற்றவில்லை."
"நான்காவதாக,
ஷைத்தான் உங்கள் பரம எதிரி என்று நீங்கள் சொல்கிறீர்கள்."
"ஆனால், அவனது உற்ற நண்பர்களாகவே நீங்கள் இருக்கிறீர்கள்."
"நீங்கள் சொர்க்கத்தை மிகவும் விரும்புவதாகச் சொல்கிறீர்கள்.
ஆனால், அதற்குத் தகுதியானவராக இருக்க
நீங்கள் முயற்சிக்கவில்லை."
ஆறாவது,
"நரகத்திற்கு பயப்படுகிறோம் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள்.
ஆனால், அங்கு செல்வதற்கு ஏற்றாற்போல
உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள்."
"மரணம் என்பது நிஜம் என்று சொல்கிறீர்கள்.
ஆனால், அதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவுமில்லை."
"எல்லோரிடமும் நீங்கள் தவறுகள், குறைகள் காண்கிறீர்கள்."
"ஆனால், உங்களுடை தவறுகளை, குறைகளை நீங்கள் காண்பதேயில்லை."
"நீங்கள் இறைவன் அளித்திருக்கும் எல்லாவற்றையும்
ஏராளமாக நுகர்கிறீர்கள்.
ஆனால் அதற்காக இறைவனுக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இல்லை."
சரி, கடைசிக்கு வந்துவிட்டோம்.
"உங்களில் இறந்தவர்களை நீங்கள் புதைக்கிறீர்கள்.
"ஆனால், நீங்களும் ஒரு நாள் அடக்கம் செய்யப்படுவீர்கள் என்பதை
மனதார உணரவில்லை."
மேற்கூறிய பத்து காரணங்களின் பட்டியலை
இப்ராஹிம் எதம் (ரஹ்) அவர்கள்
பஸ்ரா மக்களுக்கு கூறுகிறார்கள்.
.
.
இவையெல்லாம்
இன்றைய காலத்தில்
இருக்கிறதா இல்லையா?
நமக்கு கிடைக்கும் எல்லாம்
நமது விதியில் உள்ளதால் கிடைக்கிறதா?
அல்லது,
நமது பிரார்த்தனையின் வலிமையால் கிடைக்கிறதா?
சரி, இந்தக் கதை நமக்கு என்ன சொல்கிறது?
அதன் சாராம்சம் என்ன?
நமக்கு எது நடந்தாலும்
நாம் நன்றியுணர்வு இல்லாமல் இருப்பதனால் தான் நடக்கிறது.
இன் ஷா அல்லாஹ்,
"நன்றியுணர்வு" என்றால் என்னவென்று
இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
அல்ஹம்துலில்லாஹ் ❤️
ஆயுள் முழுதும் ஃபீ அமானில்லாஹ்.
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
28.11.2K21, ஞாயிறு.
No comments:
Post a Comment