வறுமையில் வளரும்
ஒருவரின் சாதனைகளை
ரொம்பப் பெரிதாகப் போற்றுகிறோம்.
ஆனால்,
#திராட்சை_மொலாசஸ் போல
வறுமையின், பசியின் சக்தி அதுதான்.
அதிலே
ஆச்சரியப்படுவதற்கு எதுவுமேயில்லை.
அதனை,
வறுமை என்னும்
உந்து சக்திக்குள் இருக்கும்
பலர் புரிந்து கொள்வதுமில்லை.
பயன்படுத்திக்கொள்வதும் இல்லை.
.
வசதிகளுடன் வாழ்பவரின்
சாதனைகளைத் தான்
உண்மையில் போற்ற வேண்டும்.
அதுதான்
உண்மையில் போராட்டம்.
என்று நான் நினைக்கிறேன்.
வசதியால் பெருபாலானோர்
போகக் கூடிய,
போக வேண்டிய இடத்தை விட்டும்
பொதுவான ஓர் இடத்திற்கே போயிடுறாங்க.
உதாரணமாக:
வசதி வாய்ப்புக்கள் இருப்பவரும்,
வறுமையில் இருந்து வந்தவரும்
ஒரே நிலை வைத்தியராக (MBBS) இருப்பதில்
எனக்கு உடன்பாடில்லை.
வசதி இருப்பவர்
தனக்கு இறைவன் அளித்திருக்கும்
வளங்களைப் பயன்படுத்தி
இன்னும் மேலே
கல்வியால் உயர முயற்சிக்க வேண்டும்.
அதிலே ஆர்வம் இல்லையேல்,
வசதி, வாய்ப்பில்லாத
வைத்தியரையாவது
உய(ர)ர்த்த உதவ வேண்டும்.
.
.
இதனைப் புரிந்து கொள்வதிலும்
நம்மில் வேறுபாடுகள் இருக்கும்.
அது தவிர்க்க முடியாதது.
.
.
முஹம்மத்❤ஸன்ஸீர்.
31.12.2K21, வெள்ளி.
*திராட்சை மொலாசஸ்:
திராட்சைப் பழங்களைச் சாறு பிழிந்து,
நெருப்பில் கொதிக்க வைத்துப் பெறப்படும்
மருத்துவ குணம் அதிகம் கொண்ட பானம்.
No comments:
Post a Comment