இறைவனின் நாட்டத்தினால்
அவனது உதவியுடன்
ஆதம் (அலை) அவர்களில் துவங்கி
நபிமார்களின், கலீபாக்களின்,
சில ஸஹாபாக்களின், ஸஹாபியாக்களின் வரலாறுகளையும்,
சில இமாம்களின் வரலாறுகளையும்,
ஷைகுல் அக்பர் இப்னுல் அராபி (ரஹ்),
மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) போன்ற
சில மார்க்க அறிஞர்களின் வரலாற்றுப் போதனைகளையும்
உஸ்மானிய கலீபா அப்துல் மஜீத் II இன்
நீதியான ஆட்சிமுறை,
சுல்தான் ஃபாத்திஹ் மெஹ்மத் II பற்றிய
நிஜக் கதைகள் பலவற்றையும் வாசித்தாயிற்று.
கொரோனா விடுமுறையின்
வரப்பிரசாதங்களில் இவை
மிக மிகப் பெறுமதியானவை.
மாஷா அல்லாஹ் ❤️
எல்லா வரலாறுகளையும்
ஒரு பருந்துபோல
ஒட்டுமொத்தமாக மேலிருந்து காணும்போது
புத்திக்குப் புரிவதெல்லாம்
பின்வருவன தான் ...
❤️
அவைவரும் இறைவனால் அருள்செய்யப்பட்டவர்கள்.
அதனால் தான்,
அவர்களின் புனிதப் பயணத்தில்
அளவில்லாத சோதனைகளையும் வேதனைகளையும்
அவ்வப்போது சந்தித்து, சகித்து
சிந்தித்திருக்கிறார்கள்.
சாதித்திருக்கிறார்கள்
தந்தைக்கு நாடப்படாத வெற்றி
தனயனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தலைவனுக்கு நாடப்படாத வெற்றி
பின்வந்த தூய சீடர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
❤️
பொன், பொருள், ஆரோக்கியம் என்று
இறைவன் அளித்திருந்த
பெறுமதிமிக்க செல்வங்களையெல்லாம்
தமது புனித பயணத்திற்காக
தியாகம் செய்யுமளவிற்கு
சோதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
❤️
பெற்றோர், பிள்ளைகள்,
உடன்பிறப்புகள், வாழ்க்கைத் துணை என்று
உளவியல் துணையாக இருந்த உறவுகள் எல்லாம்
தமது புனித பயணப்பாதையில்
காயப்பட்டும், கடத்தப்பட்டும், காவுகொடுத்தும்
துக்கத்தினால் துவண்டு
துக்கம் அனுஷ்டித்திருக்கிறார்கள்.
பின்னர்,
பாதை மாறாமலும், பின்வாங்காமலும்
மீண்டும் பயணித்திருக்கிறார்கள்.
❤️
வாசகர்களாகிய நாம்
வரலாறுகளில் எதிர்பாராத கணங்களிலெல்லாம்
அக்கணத்தில் வாழ்ந்தவர்கள்
இறைவனிடம் எதிர்பார்த்த உதவி
அவர்களுக்கு ஏதோ ஒரு வழியில்
இறைவனிடமிருந்து வந்து சேர்ந்திருக்கிறது.
.
.
மீனின் வயிற்றிலே
யூனுஸ் நபிக்குக் கிடைத்த பாதுகாப்புப்போல,
வெள்ளத்திலே
நூஹ் நபிக்குக் கிடைத்த மிதத்தல்போல,
நெருப்புக்கு கிடங்கிலே
இப்ராஹிம் நபிக்குக் கிடைத்த குளிர்ச்சிபோல,
பாழுங் கிணற்றிலிருந்தும்,
ஏழாண்டு சிறையில் இருந்தும்
யூஸுஃப் நபிக்குக் கிடைத்த உயர்ச்சிபோல,
மூடிக் கிடந்த கடலிலே
மூஸா நபிக்கு கிடைத்த பாதைபோல
வலிகளும், இழப்புக்களும் நிறைந்த பாதையில்
தத்தமது நஃப்ஸை ஓட்டிச்சென்றுதான்
வெற்றிபெற்று ஈற்றில்
வரலாறு ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக,
தன்னிலும்
தான் வாழ்ந்த சூழலிலும் நீதியை நிலைநாட்டி
மறுமையின் உயர் நிலைமைகளை
தேடி, நாடிச்சென்ற ஒவ்வொருவரும்
அளவிலாத சோதனை வெப்பத்தில்
வெந்து, அனுபவித்து, சகித்து
ஈமானை மேம்படுத்தித் தான்
ஈருலகிலும் மகத்தான உயர் நிலைகளை
ஈற்றிலே பெற்றுக்கொண்டுள்ளனர்.
பொறுமையும், தொழுகையும் ❤️
பேருதவிகள் பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
❤️
இறைவனின் நீதியை / சத்தியத்தை
உலகில் நிலைநாட்டுகின்ற புனிதப் பணியில்
மேற்சொன்ன அனைவரும்
வெவ்வேறு பரிமாணங்களில்
தம்மை "முழுமையாக" அர்ப்பணித்திருக்கிறார்கள்.
வேறு வாழ்க்கை வாழவில்லை.
வாழ்கையை - இறைவன் விரும்பும் விதமாக
வாழ்ந்திருக்கிறார்கள்.
நாமும் அதே பாதையில்
கருணை, நீதி என்ற இரு பக்கங்கள் கொண்ட
நாணயமாகப் பயணிக்க வேண்டியவர்கள்.
நமது வரலாறுகள் ஈரமானவை.
.
.
உலகில் நெருப்பிலே வேகாமல்
உயர் சக்திபெற்ற பிரதான உணவேதும் உண்டா?
உதாரணம்:
சோறு, பாண், ரொட்டி, கஞ்சி, கிழங்கு, எட்செற்றா?
வேதனைகளில் வெந்து
வெளிவந்தவர்கள் தான்
வேறுபட்ட சக்தி பெற்றவர்களாக
வேற்றுவழி சென்றிடாமல்
நேர்வழியில் சென்றிருக்கிறார்கள்.
செல்வமும் சோதனைதான்
சீக்கும் சோதனைதான்,
சாப்பிட வழியில்லாத நாட்களும் சோதனைதான்
என்ற உண்மையை நம்பியதால்
வலிகளும் இழப்புக்களும் அவர்களுக்கு
வழிகளைம் இலக்குகளையுமே
காண்பித்திருக்கின்றன.
நஃப்ஸின் வழியில் நாம் பயணிப்பது இலகு.
முடிவிடம் : உலகில் சுவனம், மறுமையில் நரகம்.
நஃப்ஸை
நல்வழியில் பயணிக்கச் செய்வது தான் வாழ்க்கை
அது கடினம் - ஆனால், கூலி சுவனம்.
பறவைக்கு காற்றோடு பறத்தல் - இலகு.
இறங்குதல் தான் மிகக் கடினம்.
Flying is easy. Landing is quite difficult.
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
27.11.2K21, சனிக்கிழமை.
No comments:
Post a Comment