Saturday, January 15, 2022

நூறு வருஷ நித்திரை.


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நபி உஸைர் (அலைஹிஸ்ஸலாம்).


நபி யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் 

மற்றொரு பெயர்தான் இஸ்ராயீல். 

அவர்களின் பன்னிரண்டு பிள்ளைகள் மூலமாகப் 

பல பாகங்களுக்கும் பரம்பலடைந்த சந்ததிகள் தான் 

பனூ இஸ்ராயீல்கள். 


சனிக்கிழமைகளில் அழ்ழாஹ்வின் கட்டளையை மீறி 

மீன் பிடித்து வந்தவர்கள் 

ஒருநாள் இரவோடிரவாக 

குரங்குகளாக, ஏப்ஸ்களாக தோற்ற மாற்றத்திற்கு உள்ளானவர்களும் 

பனூ இஸ்ராயீல்கள் எனும் பிரிவில் 

ஒரு கூட்டத்தினர் தான். 


நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் 

பனூ இஸ்ராயீல்களுக்கு 

அழ்ழாஹ்வால் தேர்ந்து அனுப்பப்பட்ட நபிமார்களுள் ஒருவர் தான்

நபி உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள். 


பனூ இஸ்ராயீல்களுக்கு 

அழ்ழாஹ் பல நபிமார்களையும், ரசூல்மார்களையும் அனுப்பினான். 

ஆனால் அவர்களோ 

அவர்களுக்குக் கட்டுப்பட மறுத்து 

அழ்ழாஹ்வுக்கு மாறு செய்தார்கள். 

தௌராத் வேதத்தின் வழிகாட்டல்களைப் 

பின்பற்றுவதை, கற்றுக்கொள்வதை 

அவர்கள் புறக்கணித்தார்கள். மறந்தார்கள். 


எனவே, ஒரு கட்டத்தில் தௌராத் வேதம் 

பனூ இஸ்ராயீல்களின் மனதை, வாழ்வை விட்டும் 

கிட்டத்தட்ட மறைந்துபோகும் நிலைக்கு வந்தது. 

அந்தக் காலகட்டத்தில் 

பனூ இஸ்ராயீல்களில் தௌராத் வேதத்தை மனனமிட்ட, 

முழுமையாக அறிந்திருந்த ஒரேயொருவராக 

நபி உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை 

அழ்ழாஹ் ஆக்கினான். 

நபி மூலம் அழ்ழாஹ் ஒரு அற்புதத்தை 

உலகிற்கு காண்பிக்க விரும்பினான். 


சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, 

பனூ இஸ்ராயீல்கள் வாழ்ந்த ஒரு நகரம், 

நாகாரீக முன்னேற்றத்திற்கு உட்பட்டிருந்து 

பின்னர் முழுமையாக அழிந்து, சிதைந்து 

பாழடைந்து போயிருந்தது.

அந்த இறந்த நகரத்தினூடாக 

நபி உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) ஒருநாள் போறாங்க. 

அந்த நகரின் உட்கட்டமைப்பு அம்சங்களைப் பார்த்து 

நபியவர்கள் ஆச்சரியமடையிறாங்க. 

அவர்களிடம் ஒரு கழுதை இருந்தது. 

கூடவே அவர்களிடம் கொஞ்சம் உணவும் இருந்தது. 

சில அறிஞர்களின் கருத்துப்படி 

கொஞ்சம் திராட்சைப் பழங்களும், 

ஒரு பாண் தூண்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.


இந்த இறந்த நகரை  

அது முன்னர் இருந்த செழிப்பான நிலைமைக்கு 

அழ்ழாஹ் அஸ்ஸவஜல் 

எவ்வாறு மீண்டுங் கொண்டு வருவான்? 

அது எவ்வாறு நிகழ்த்தப்படும் என்று 

ஆச்சரியப்படுறாங்க நபியவங்க.

ஆனால், அழ்ழாஹ்வின் ஆற்றலில் சந்தேகப்படவில்லை.


சிறிது தூரத்தில் இருந்து  

அந்த நகரின் நிலையைப் பார்த்து 

ஆச்சரியங் கொண்டவர்களாக 

தன்னிடம் இருந்த திராட்சைப் பழத்திலும், 

பாணிலுங் கொஞ்சம் சாப்பிட்டு 

மிகுதியை அருகில் வைத்துவிட்டு 

சற்று ஓய்வுக்காக ஒரு மரத்தின் கீழ் உறங்குறாங்க. 

அதுவொரு காலையின் முந்திய பகுதி. 

அழ்ழாஹ் அஸ்ஸவஜல் 

நபி உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை 

நூறு (100) ஆண்டுகள் 

அந்த மரத்தின் கீழே உறங்கச் செய்கிறான். 


சுபஹானழ்ழாஹ் ❤️


நபி உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை 

அழ்ழாஹ் மீண்டும் விழித்தெழச் செய்தபோது 

அதுவொரு மதிய நேரமாக இருந்தது. 

ஓர் அரை நாளோ, அல்லது ஓரிரு நாட்களாகவோ உறங்கியதாகவே 

நபி அவர்கள் நினைக்கிறாங்க.


அப்போது மனித உருவில் 

அழ்ழாஹ் அனுப்பி வைத்த ஒரு மலக்கு அவரிடம் 


"எவ்வளவு நேரம் நீங்கள் உறங்குனீங்க?"


"ஒரு நாள் அல்லது அரை நாள் அளவிலேயே நான் உறங்கியிருப்பேன்."


"நீங்கள் நூறு ஆண்டுகள் உறங்குனீங்க."


ஆச்சர்யமும், அதிர்ச்சியும் மேலோங்க 

நபியவங்க திரும்பிப் பார்த்தபோது ....

திராட்சைப் பழங்களும், பாணும் 

பழுதடையாமல் இருந்த அதேநேரம், 

அவரது கழுதையோ 

உக்கி மண்ணாகி, எலும்புகள் மாத்திரம் மீதம் இருந்தன. 

சுபஹானழ்ழாஹ்.


இறந்துபோன அவரது கழுதையை 

அவரது கண் முன்னாலேயே 

100 வருடங்களுக்கு முன்னர் அது எவ்வாறு இருந்ததோ 

அவ்வாறே உயிர்பெற்று எழுந்து வரச் செய்தான் அழ்ழாஹ். 


உணவையோ, 

இறந்து போன ஒரு விலங்கையோ, 

மனிதரையோ 

அல்லது ஒரு கிராமத்தையோ மீளக் கொண்டுவர 

அழ்ழாஹ்வால் எவ்வாறு இயலும் என்பதைக் காண்பிக்கவே 

அவன் இவ்வாறு செய்தான். 


நபியவங்க அந்த நகருக்குப் போறாங்க. 

ஒரு மனிதர் கூட இல்லாமல் இறந்து கிடந்த ஒரு இடம் , 

மனிதர்கள் நிறைந்த, செழிப்புற்ற, கட்டடங்கள் நிறைந்த 

சுறுசுறுப்பான ஒரு நகரமாக 

உயிர்பிக்கப்பட்டிருந்தது. 


இந்த இறந்த நகரை 

அது முன்னர் இருந்த செழிப்பான நிலைமைக்கு 

அழ்ழாஹ் அஸ்ஸவஜல் 

எவ்வாறு மீண்டும் கொண்டு வருவான் 

என்ற கேள்விக்கு 

அழ்ழாஹ் விடையளித்தான்.


தௌராத் வேதத்தை 

முழுமையாக மனனமிட்டிருந்த ஒரேயொரு நபரான 

நபி உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் 

அங்கு சென்றபோது 

தௌராத் வேதத்தை முழுமையாக அறிந்தவர்கள் 

யாருமே அங்கே இருக்கவில்லை. 

தௌராத் வேதத்தை மிகச் சிறிய அளவில் அறிந்திருந்த 

ஒரு சிலரைத் தவிர, 

தௌராத் வேதம் முழுமையாக மறக்கப்பட்டிருந்தது. 


நபியவர்கள் அந்த நகரை அடைந்தபோது 

மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு 

நீங்கள் யார்? என்று கேட்க அதற்கு நபியவர்கள் 


"உங்களுக்கு உஸைர் என்பவரைப் பற்றி என்ன தெரியும்?"


"உஸைர் ஒரு நேர்மையான, பக்தியுள்ள மனிதர். 

100 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தார். 

தௌராத் வேதத்தை முழுமையாக அறிந்த, 

மனனமிட்டிருந்த ஒரேயொருவர் அவர்தான்." 


"நான் தான் உஸைர்." என்றாங்க நபி.


"உஸைர் இறந்து 100 வருடங்களாகின்றன. 

நீங்கள் எங்கே இருந்தீங்க? 

நாங்கள் இதை எவ்வாறு நம்புவது? 

என்று மக்கள் கேட்க ...


"உஸைரின் காலத்தில் வாழ்த்த யாராச்சும் 

இன்று உங்களில் உயிரோடு இருக்கின்றாரா?"


"ஆம். 

உஸைர் அவர்களின் காலத்தில் வாழ்ந்த 

ஒரு பெண் மூதாட்டி இருக்கிறார். 

அவருக்கு அப்போது 20 வயது. 

இப்போது 120 வயதில் வாழ்கிறார்" என்றாங்க மக்கள்.


அந்த மூதாட்டி அழைத்துவரப்பட்டு 

உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் 

தோற்ற அடையாளங்களைப் பற்றி வினவ 

ஒவ்வொரு அடையாளமாக அந்தப் பெண்மணி விபரிக்கின்றார். 

அப்பெண்மணிக்கு இப்போது பார்வை இல்லை.

ஆனால், அத்தனை அடையாளங்களும்

100% கச்சிதமாகப் பொருந்திப் போயிற்று. 


நான் தான் உஸைர் (அலைஹிஸ்ஸலாம்). 

நானொரு அழ்ழாஹ்வின் தூதர். 

அழ்ழாஹ் என்னை 100 ஆண்டுகள் உறங்கச் செய்தான். 

இப்போது மீண்டும் என்னை உயிர்ப்பித்து 

உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறான் என்றதும் 

மக்கள் அவரை நம்பி ஏற்று அவரை நேசிக்கத் துவங்கினர். 

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) மூலமாக வழங்கப்பட்டிருந்த 

தௌராத் வேதத்தை 

மீண்டும் அந்த பனூ இஸ்ராயீல் மக்களிடையே 

உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) கற்பித்து உயிர்ப்பித்தார்கள்.


எல்லாமே தெளிவான சான்றுகளால் நிரூபணமானதும் 

"இப்போது எனக்குப் புரிகிறது. 

அழ்ழாஹ் அஸ்ஸவஜலுக்கு எல்லாமே சாத்தியம். 

எது வேண்டுமோ அவன் "ஆகுக" என்றதும் அது ஆகிவிடுகிறது." 

என்று நபி உஸைர் (அலைஹிஸ்ஸலாம்) 

அவர்கள் கூறினாங்க.

.

அழ்ழாஹு அக்பர் ❤️

(அல்குர்ஆன் : 2:259)

.

முஹம்மத்❤ஸன்ஸீர்.1

9.12.2K21, Sunday.


https://m.youtube.com/watch?v=-xV0OslnWhc

No comments:

Post a Comment