Friday, January 14, 2022

துன்ப இன்பச் சேர்க்கை.
பொறுமையினால் கிடைக்கும் 
மகிழ்ச்சியின் ❤️ இரகசியம்.
.
.
ஆதலின், நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 94:5 - 6)

துன்பத்துடன் இன்பம் என்றும்
நிச்சயமாக என்றும் 
சொல்கிறான் இறைவன்.

இறைவன் வாக்களிக்கும் இந்த இன்பம்,
துன்பத்துடன் கலந்துதான் இருக்கிறது.
தனித் தனியாகச் சேர்ந்தும் இல்லை.
ஒன்றன் பின்னொன்றாகவும் இல்லை.
வேறுபிரிக்க முடியாது.

வினாகிரிக் கரைசலில் 
கொஞ்சம் அருந்தியபின்
தேனை அருந்திப் பாருங்கள்.
அதன் இனிப்புச் சுவை
தனியாகத் தேன் அருந்துவதைக் காட்டிலும் 
மிக அதிகமாக இருக்குமே
அதுபோல.

பொறுமையுடன்,
துன்பத்தை / சோதனையை 
சகித்துச் சுகிக்கும்போது
இறைவன் நாடியிருக்குங் கணத்தில் 
வெளிப்படும் இன்பம் இருக்கிறதே !
அளப்பெரிது ❤️
பொறுமையாளர்களுக்கே கிடைக்கிறது.

அப்பழுக்கற்ற 
அனுபவ உண்மை இது.
துன்பத்திலிருந்த பொறுமை
இன்பத்திலும் தொடர வேண்டும்.



.
.
முஹம்மத் ❤️ ஸன்ஸீர்.
03.01.2K22, திங்கள்.

No comments:

Post a Comment