சொல்ல மறந்த ஸலவாத்து.
.
வெள்ளிக்கிழமை
ஜூம்ஆ தொழுகையின் பின்னர்
பொதுமக்களின்
பிரச்சினை தொடர்பான மனுக்களைப் பெற்று
அவற்றை வாசித்துத் தீர்வு கொடுப்பது
உஸ்மானிய சாம்ராஜ்யத்தின்
கலீபா அப்துல் ஹமீட் (II) இன் வழக்கம்.
அவ்வாறு கிடைக்கப் பெற்ற கடிதங்களை
அவரது செயலாளர் தஹ்ஷின் பாஷா
ஒருநாள் வாசிக்கிறார்.
ஒரு கடிதத்தைப் பார்த்தவர்
அதை வாசிக்காமல் விட்டுவிட்டு
மறு கடிதத்திற்கு செல்கிறார்.
அந்தக் கடிதத்தை
நீங்கள் ஏன் வாசிக்கவில்லை பாஷா?
அதை வாசிக்கும்போது
எனக்கு சங்கடமாக இருந்தது சுல்தான்.
ஏன்?
அதை எழுதியிருப்பவர்
நீங்கள் அவருக்கு
ஏதோ கொடுக்க வேண்டியுள்ளதாக எழுதியிருக்கிறார்.
அவரை அரண்மனைக்கு அழைத்து விசாரித்து
ஆறுதலுக்காக கொஞ்சம் பணம் கொடுத்தோம்.
ஆனாலும், அவர் போவதாக இல்லை.
இப்போது அவர் எங்கே?
இங்கே தான்.
வெளியில் இருக்கிறார் சுல்தான்.
அவரை உள்ளே வரச் சொல்லுங்க.
(வைஸல் என்ற அந்த நபர் உள்ளே வருகிறார்).
வாங்க சகோதரரே.
உங்க பிரச்சினையைச் சொல்லுங்க.
கலீபா.
உங்களிடம் இருந்து எனக்குக் கொடுமதி இருக்கிறது.
எந்த வகையில்
நான் உங்களுக்குக் கடனாளியாக இருக்கிறேன்?
சுல்தான்.
நான் வர்த்தகம் செய்பவன்.
நான் ஒவ்வொரு இரவும் தொழுது
அழ்ழாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறவன்.
வியாபாரத்தில் நஷ்டவாளி ஆகிவிட்டேன்.
எனக்கு அதிக கடன் இருக்கிறது.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவங்களை
இரவு கனவில் கண்டேன்
என்று முகமலர்ந்து சொன்னதும் ...
கலீபாவும் செயலாளரும்
நபியின் மீது கொண்ட அன்பின் மேலீட்டால்
கண் கலங்கி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர் தொடர்ந்தார்.
"எங்கள் ஹமீட் இடம் சொல்லுங்கள் ...
வழக்கமாக இரவில் என் மீது சொல்லும் ஸலவாத்தை
இரவு அவர் சொல்ல மறந்துவிட்டார்" என்று,
மேலும் உங்களுக்குத் தேவையானதை தரும்படி
அவரிடஞ் சென்று கேளுங்கள்" என்றும்
நபியவங்க என் கனவில் கூறினாங்க சுல்தான்.
என்றதும்
அதிர்ச்சி மேலிட்டு நிலை குலைந்து
கண்ணீர் மல்க எழுந்து நின்றுவிட்டார்கள்
கலீபாவும் செயலாளரும்.
அவங்க என்ன சொன்னாங்க?
"எங்கள் ஹமீட் இடம் ...." என்றதும்
அவரை நிறுத்தி
தங்க நாணயங்கள் நிறைந்த ஒரு பொதியை எடுத்து
இதை எடுத்துக்கங்க மகனே என்று
அவரிடங் கொடுத்தார் கலீபா.
அவங்க என்ன சொன்னாங்க என்று
மீண்டும் ஒரு முறை சொல்ல முடியுமா?
"எங்கள் ஹமீட் இடம் ...." என்றதும்
அவரை மீண்டும் நிறுத்தி
இன்னொரு தங்க நாணயப் பொதியை எடுத்து
இதையும் எடுத்துக்கங்க மகனே என்று
அவரிடங் கொடுத்தார் கலீபா.
இவ்வாறு
நான்காவது முறையுங் கூறச் சொன்னபோது
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவங்களைக்
கனவில் கண்டேன்.
அவர் "எங்கள் ஹமீட் இடம் ...." என்றதும்
மேலும் ஒரு தங்க நாணயப் பொதியையுங்
கொடுத்தார் கலீபா.
அப்போது செயலாளர்
"இதுவரை பெற்றுக்கொண்டது
உங்களுக்குப் போதுமானதாக இல்லையா?" என்றதும்.
"போதும்.
இதனைக் கொண்டு உடனடியாகச் சென்று
என் கடனை முழுமையாக அடைத்து விடுவேன்" என்று கூறி
விடை பெற்றார் வைஸல் அவர்கள்.
"பாதுகாப்பாகச் செல்லுங்கள்." என்றார் கலீபா.
சுல்தான்.
விட்டிருந்தால் அந்த மனிதர்
உங்களிடம் உள்ள அனைத்தையும் எடுத்திருப்பார் போல இருந்தது.
என்ன சொல்றீங்க பாஷா.
"எங்கள் ஹமீட் .." என்ற நபியின் அந்த வார்த்தைக்காக
என்னிடமுள்ள எல்லாச் செல்வத்தையும்,
ஏன் ... அவர் கேட்டிருந்தால்
கூடவே என் ஆட்சியையுங் கூட
நான் அவருக்குக் கொடுத்திருப்பேன்.
நான் இரவு வேலை செய்துகொண்டிருந்தேன்.
தூக்க மிகுதியினால் என்னையறியாமல்
என் மேசை மீதே நான் உறங்கிவிட்டேன் பஷா.
நபி மீது ஸலவாத்துச் சொல்ல
இரவு நான் மறந்துவிட்டேன்.
நான் தவறு செய்துவிட்டேன் பஷா.
அழ்ழாஹ் என்னை மன்னிப்பானாக என்று கூறி
இருவரும் அழுதாங்க.
.
வெள்ளிக்கிழமைகளில்
நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவங்க மீது
அதிகம் அதிகம் ஸலவாத்துச் சொல்வது
சுன்னத்தாக இருக்கிறது.
.
நபியவர்களின் நினைவூட்டலுக்கு
நாம் எப்போது தகுதியாவது?
.
முஹம்மத்❤ஸன்ஸீர்.
No comments:
Post a Comment