Friday, January 14, 2022

கொடுத்ததோ கொஞ்சம் தான்

கிடைத்ததோ ❤️ பிரார்த்தனை 🤲

.

.

2013 ஆம் ஆண்டு என்றுதான் நினைக்கிறேன்.

RedR UK என்ற நிறுவனத்தில் 

ஒரு Professional Trainer ஆக இருந்த காலம் அது.


யாழ்ப்பாணம்.

பழைய புகையிரத நிலையம்.

கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பாரற்று கிடந்தது.

நிறையப் பேர் 

பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார்கள்.

எனக்கான வாகனம் வரும்வரை 

காத்திருக்கிறேன்.


என் உம்மாவின் வயது மதிக்கத்தக்க

ஓர் அம்மா அங்கே வருகிறார்.

அங்கே நின்றிருந்த ஒவ்வொருவரிடமுஞ் சென்று

கையை நீட்டி நீட்டி உதவி கேட்கிறார்.

ஓரிருவரைத் தவிர 

வேறு யாருமே 

அவரைச் சட்டை பண்ணியதாகத் தெரியவில்லை.


அப்படியே நீட்டி நீட்டி 

"இல்லைகள்" வாங்கி நிரப்பிய 

வெறுங்கையோடு என்னிடமும் வருகிறார்.


"தம்பி, சாப்பாட்டுக்கு ஏதாச்சும் உதவி பண்ணுப்பா..."

என்று என்னிடங் கேட்க ...


ஏனோ தெரியவில்லை

எனது உம்மா ஞாபத்திற்கு வந்து விடுகிறார்.

சட்டைப் பையில் இருந்த 

சாப்பாட்டுக்குப் போதுமான பணத்தை

எனக்கு முன்னரே 

எடுத்துக் கொடுத்து விடுகிறது மனசு ❤️


சிரித்த முகத்துடன் 

சென்று விடுகிறார் அவர்.


"அவங்களுக்கெல்லாம் 

அவ்வளவு பணம் குடுக்கத் தேவையில்ல.

குடுத்துக் குடுத்துப் பழக்காதீங்க" என்று 

அருகே நின்றிருந்த சிலர்

ஆளாளுக்கு என்னை எச்சரிக்கிறார்கள்.

இறைவன் கொடுக்க நினைப்பதை

இவர்களோ, நானோ எவ்வாறு தடுக்க இயலும்?

என் அம்மாவின் ஞாபகம் வந்தது

இவர்களுக்கெப்படிப் புரியும்.

அவர்கள் அவ்வாறு சொல்லி முடித்த 

சில நிமிடங்களில்

அந்த அம்மா மீண்டும் என்னிடம் வந்து ...


"தம்பி, நீ போற பயணம் 

உனக்கு சிறப்பா அமைய கடவுள் துணை நிப்பான்.

புள்ள குட்டியோட நீ சந்தோஷமா இருப்பாய்."

என்று சொல்லிவிட்டுப் போனாங்க.


எனக்கு அழுகை வந்துவிட்டது.

திருமணமாகி நீண்ட ஆண்டுகளாக

குழந்தைக்காகக் காத்திருந்த காலம் அது.


திரும்பிப் பார்த்தபோது ...

என்னைப் பார்த்த சகோதரனிடம்


"நாம தர்மம் செய்கிற

எல்லா இடங்களிலும், சந்தர்ப்பங்களிலும்

இதுபோல பிரார்த்தனைகள் கிடைக்கிறல்ல அண்ணன்.

இப்ப சொல்லுங்க 

நான் குடுத்தது தப்பா?

இந்தப் பிரார்தனைக்காகவே

எவ்வளவுங் குடுக்கலாம் ல."

..

அன்றைய நாளும், பயணமும்

ரொம்ப சிறப்பாக இருந்தது.

ஏனோ, தெரியவில்லை.

என் நினைவில் தெளிவில்லாத 

அந்த அம்மாவின் முகமும்,

அவவோட அந்தப் பிரார்த்தனையும்

அவ்வப்போது 

அடிக்கடி நினைவிற்கு வரும்.

இன்று பகலுணவின்போதும் 

நினைவிற்கு வந்தது.

மாஷா அல்லாஹ்.

ஆண்டவனின் நாட்ட்த்தில்

அந்தப் பிரார்த்தனை பலித்திருக்கிறது.

..

கொடுத்தது கொஞ்சம் தான்

கிடைத்ததோ ❤️ 

விலை மதிப்பற்ற ஒரு பிரார்த்தனை 🤲

அல்ஹம்துலில்லாஹ் ❤️

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

24.12.2K21, வெள்ளிக்கிழமை.

No comments:

Post a Comment