நஃப்ஸின் நரித்தனம்.
ஹராமாகும் ஹலால்.
ஒரு சிறிய வரலாற்று நிஜக்கதை
சொல்லப் போகிறேன்.
இதை அறிந்த பின்னும்
நம்ம வாழ்க்கையில,
வருமான வழிகள் ல
மாற்றம் செய்யலன்னா ...
அழ்ழாஹ்வின் கருணையும், நாட்டமுமின்றி,
வேறெந்த நிகழ்தகவுமில்லை.
.
ஒரு தடவை
ஹஸரத் அலீ (ரழியுழ்ழாஹு அன்ஹு) அவங்க
ஒரு பள்ளிவாசலுக்குத் தனது குதிரையில வாராங்க.
பள்ளிவாசலின் வாயிலில்
ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறான்.
பள்ளிவாசலுக்குள் சென்று திரும்பி வரும்வரை
தனது குதிரை மீது
கொஞ்சம் கவனம் வைத்து உதவுங்கள்
என்று கூறிவிட்டு உள்ளே போறாங்க.
ஹஸரத் அலீ (ரழியுழ்ழாஹு அன்ஹு) அவங்க
திரும்பி வரும்போது
அவர்களின் கையில்
இரண்டு வெள்ளி நாணயங்கள் இருந்தன.
அவற்றை
அந்த மனிதனுக்கு கொடுப்பதற்காகவே
கொண்டு வந்தாங்க.
வெளியே வந்து பார்த்தபோது
அந்த மனிதனும்,
குதிரையின் கடிவாளமும் இருக்கவில்லை.
ஹஸரத் அவங்க திரும்பி வருவதற்குள்
அந்த மனிதன்
குதிரையின் கடிவாளத்தைத் திருடிக்கொண்டு
ஓடி விடுகிறான்.
பின்னர்,
அலீ (ரழியுழ்ழாஹு அன்ஹு) அவங்க
தனது வீட்டுக்கு வந்துட்டாங்க.
தன்னுடைய பணியாட்களில் ஒருவரை அழைத்து
அந்த இரு வெள்ளி நாணயங்களையுங் கொடுத்து
சந்தையில் ஒரு கடிவாளம் வாங்கி வருமாறு அனுப்புறாங்க.
பணியாளரும் ஒரு கடிவாளம் வாங்கி வருகிறார்.
ஹஸரத் அலீ (ரழியுழ்ழாஹு அன்ஹு) அவங்க
அதனைப் பார்த்தபோது
அது பள்ளியில் வைத்து திருடப்பட்ட
அதே கடிவாளமாக இருந்தது.
அந்தத் திருடன்,
அவன் திருடிச் சென்ற கடிவாளத்தையே
இரண்டு வெள்ளி நாணயங்களுக்கு விற்றிருந்தான்.
அவனுக்கென்று அழ்ழாஹ்
ஹலாலாக நாடியிருந்த இரு வெள்ளிக் காசுகளும்
கடைசியில்,
அவனின் நஃப்ஸின் நரித்தனங் காரணமாக
ஹராமானதாக அவனிடம் சேர்க்கப்பட்டன.
.
மனிதன் அவசரப்பட்டு,
நஃப்ஸுக்கு அடிமைப்பட்டு
அழ்ழாஹ் மீது நம்பிக்கையிழந்து,
பொறுமையிழந்து, திருப்தியின்றி
அழ்ழாஹ்
ஹலாலாகக் கொடுக்க நாடுவதை
ஹராமாக ஆக்கிக் கொள்கிறான்.
.
முஹம்மத்❤ஸன்ஸீர்.
12.01.2K22, WED.
No comments:
Post a Comment