Saturday, January 15, 2022

"பறவையின் ஈமான்".

"அல்லாஹ்வின் மீது 
நீங்கள் முழுமையான நம்பிக்கை வைத்தால், 
பறவைகளைப் போல உங்களுக்கும் உணவு வழங்கப்படும்: 
அவை காலையில் பசியுடன் வெளியேறி, 
மாலையில் முழு வயிற்றுடன் திரும்பி வருகின்றன." என்று 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: 
என உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்.
(சுனன் இப்னு மாஜா 4164)
.
இறைவனை நம்புவதில்
பறவைகள் போல 
உறுதியாக இருத்தலே இந்த வாழ்க்கை.
.
மனிதனில் மிகப் பெரும்பாலானோருக்கு 
இந்த 👆 உண்மை தெரியும்.
ஆனால், நம்பிக்கையும், பொறுமையும் இல்லை. 
அதனால் தான்,
தனக்கான அன்றாட உணவை / செல்வத்தைத் 
தானே தேடிப்பெறுவதுபோல நினைத்துக்கொண்டு 
பொறுமையிழந்து,
தன்வழி சரியா தவறா என்று காணாமலும், 
தவறென்று உணர்ந்தால் தவிர்க்காமலும், 
வருமானம் / வாழ்வாதாரம் ஈட்டுவதிலேயே 
குறியாக இருக்கிறான். 

அவன் நினைத்ததை அடையச் செய்யும்போது 
தற்பெருமையால் திசைமாறிப் போகிறான்.
தவறச் செய்கின்றபோது 
தட்டழிந்து சிலநேரம்  
தற்கொலையும் செய்துகொள்கிறான்.

எந்தப் பறவையும் தற்கொலை செய்வதில்லை.
மனிதனைத் தவிர,
தற்கொலை செய்துகொள்ளும் 
ஒரு ஜீவராசியும் உலகில் இல்லை. 

சில சிலந்தி இனங்களில் 
தாய்ச் சிலந்தியானது 
தன் சந்ததிகளுக்குத் தன்னைத் தானே 
உணவாக உண்ணக் கொடுத்து இறக்குமாம். 
ஆனாலதன் நோக்கம் 
தன்னுயிரை மாய்த்துக் கொள்வதல்ல. 
மாறாக, அது அதன் தாய்ப் பாசம்.
இஸ்லாத்தில்,
தற்கொலைக்குத் தண்டனை 
நரகம் தான்.

இருப்பவனிடமோ
இல்லாதவனிடமோ இருந்து
இறைவனுக்குப் பிடிக்காத விதத்தில்
நுட்பம் என்ற பெயரில்
நுணுக்கமாக எடுத்துக்கொண்டாலும்
அந்த வியாபாரமும் 
ஒருவகையில் திருட்டுத்தான்.

இறைவன் நம் அனைவரது ❤️ ஈமானையும் பாதுகாப்பானாக.
ஆமின். 🤲
.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர். 
02.11.2K21, Tuesday.

No comments:

Post a Comment