இரு பாண்களின் இரும்படி.
உஸ்மானிய சாம்ராஜ்யத்தின்
கடைசிக் கலீபா
அப்துல் ஹமீட் இன் ஆட்சிக் காலம் அது.
இஸ்தான்புல் (கொன்ஸ்தாந்திநோபிள்).
சுல்தான் அப்துல் ஹமீட் உடன் நேரடியாக மோதித் தோற்று
சோர்வடைந்த சியோனிஸ யூதர்களால்
சுல்தானுக்கு எதிராக
மக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டுவதற்காக
சதித் திட்டமொன்று அரங்கேறுகிறது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கவில்லை.
கூலிகள் அதிகரிக்கவில்லை.
ஆனாலும்,
நகரின் பெரும்பான்மை ஏழை மக்கள்
உணவிற்காகப் பயன்படுத்தும் பாணின் விலை
பேக்கரிகளின் கோர்ப்பரேஷனினால்
திட்டமிட்டு இருமடங்காக்கப்படுகிறது.
கலீபாவின் காதுகளுக்கு எட்டிய இந்த விஷயம்
அவரது மனதைக் கலங்கச் செய்கிறது.
#மாறுவேடத்தில் நகருக்குள் சென்று,
ஒரு பேக்கரியில் இரண்டு பாண்கள் வாங்குகிறார் சுல்தான்.
அப்போது,
ஒரு ஏழைப் பெண் ஒரு பாண் வாங்கப் பணம் போதாமல்
பாதிப் பாண் கேட்கிறாள்.
அப்போது கடைக்காரர்,
"மீதியை நான் என்ன செய்வது?
வேண்டுமானால் முழுமையாக வாங்கு." என்று
கொஞ்சங் கடுமையாகப் பேசுகிறான்.
முழுப் பானையும் வாங்கிக்கொண்டு
வெளியே வருகிறார் அந்தப் பெண்மணி.
அரண்மனைக்குத் திரும்பிய சுல்தான்
அரண்மனைச் சமையலறையிலும்,
இராணுவச் சமையலறையிலும்
உணவு தயாரிப்பதை வெகுவாகக் குறைத்து
இரவு பகலாகப் பாணையே தயாரிக்க உத்தரவிடுகிறார்.
இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால்,
பாண் தயாரிக்கும் பணியில்
சுல்தானின் மனைவி, சிறுமி உட்பட பிள்ளைகள்,
சகோதரிகள் அனைவருமே மும்முரமாக பங்கேற்கின்றனர்.
பாண் தயாரிக்கும் பணியைப்
பார்வையிட வந்த சுல்தான்.
பிரதான சமையல்காரரிடம்
"பெரியவரே,
இன் ஷா அழ்ழாஹ்
அதிகாலையில் முதல் வெளிச்சம் வரும்போது
ஒவ்வொரு வீட்டு வாயிலிலும்
தினமும்
இரண்டு பாண்கள் இருந்தாக வேண்டும்" என்றார்.
"அப்படியே ஆகட்டும் சுல்தான்.
என்றார் பிரதான சமையல்காரர்.
தன் கணவனின்
நல்லாட்சியை வியந்து
கைகளில் பிசைந்த மாவோடு
பூரிப்படைகிறார் அவரது மனைவி
Bபிதார் கிதின்.
.
.
பாணின் விலை
மீண்டும் பழைய நிலமைக்குத் திரும்பும் வரை.
அப்படியே நிகழ்ந்தது.
தமது பாண் உற்பத்தியை விற்க முடியாமல்
பேக்கரியாளர்கள் திணறியபோது
சுல்தானிடம் வந்து கெஞ்சுகிறார்கள்.
ஒரு சில நாட்களுக்குளேயே
பாணின் விலை
மீண்டும் பழைய நிலமைக்குத் திரும்பியது.
.
.
இராஜ்ஜியம் கடனிலே இயங்கினாலும்,
இப்படித்தான் இருந்தது
இதயமுள்ள ஆட்சி முறைமை.
.
.
மாஷா அழ்ழாஹ் ❤️
.
.
முஹம்மத்🍞 ஸன்ஸீர்.
A Learning Muslim.
30.11.2K20, திங்கள் (மீள்).
No comments:
Post a Comment