இருதயம் ❤
இடம் மாறித் துடிக்கும்
வலது புறத்திலே.
இங்கிலாந்து அரசோடும்,
சியோனிஸ்ட் யூதர்களோடும்,
அவரது சொந்த மகன் செபாஹத்தீனோடும்
கூட்டுச் சேர்ந்துகொண்டு,
கலீபா அப்துல் ஹமீட் II இற்கு எதிராக
பல சூழ்ச்சிகளையும்,
நம்பிக்கைத் துரோகங்களையும் செய்கிறார்
கலீபாவின் மச்சானும்
பிரதம ஆலோசகர்களின் ஒருவருமான மஹ்மூத்.
,
கலீபாவிடம்
வசமாக மாட்டிக்கொள்ளும் ஒவ்வொரு தடவையும்
கலீபாவினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு
மன்னிப்பளிக்கப்படுகிறார்.
ஒரு கட்டத்தில்,
கலீபாவின் இரக்க குணத்தையும், மன்னிப்பையும் உணர்ந்து
முழுமையாகத் திருந்தி
கலீபாவுக்கும், உஸ்மானிய ராஜ்ஜியத்திற்கும்
முழுமையான விசுவாசியாக
நடந்துகொள்கிறார் மஹ்மூத்.
தொடர்ந்து அரசுக்கு எதிராகத் தவறு செய்துவிட்டு
கடைசியில் இங்கிலாந்துக்குத் தப்பியோட முயன்ற
தன் மகனைப் பிடிக்க
கலீபாவிற்கு உதவுகிறார் மஹ்மூத்.
கலீபா, செபாஹத்தீனையும் மன்னித்து
இங்கிலாந்துக்குச் செல்ல அனுமதியளிக்கிறார்.
ஒரு கட்டத்தில்,
தமக்கு துரோகம் செய்துவிட்டார் என்று
கூலிக் கொலைகாரன் ஒருவனைக் கொண்டு
மஹ்மூதைச் சுட்டுக் கொல்கிறது யூதர் கூட்டம்.
சரியாக இதயம் உள்ள இடத்தில்
குறிபார்த்துச் சுடப்பட்ட மஹ்மூத்
வைத்தியசாலையில் இறக்கிறார்.
ஜனாஸா வெண்ணிறத் துணியால் மூடப்படுகிறது.
அவரது மனைவி
அவரது கைகளை பற்றிக்கொண்டு
அன்பின் மிகுதியால் அழுகிறார்.
திடீரென விரல்கள் அசைகின்றன.
அதிர்ச்சியோடும் ஆனந்தத்தோடும்
வெளிய ஓடிவந்த மனைவி
வைத்தியர்களை அழைத்துச் சென்றபோது
மஹ்மூத் இற்கு உயிர் இருந்தது.
வைத்தியர்கள் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டனர்.
இது எப்படிச் சாத்தியம் என்று
அவரை மீண்டும் சோதித்தபோது ....
.
.
இடையில் கொஞ்சம்
இங்கிலாந்துக்குப் போயிட்டு வருவம்.
.
.
1835 இல் லண்டனில்
ஜோன் ரீட் (John Reid) என்பவர்
தனது 48 வது வயதில் இறக்கிறார்.
ஜோன் ரீட் இற்கு முன்கூட்டியே அடையாளங் காணப்பட்ட
எந்தவொரு நோயும் இருக்கவில்லை.
சேர் தோமஸ் வட்ஸன் (Sir thomas Watson) எனும் இளம் வைத்தியர்
அவரைப் பரிசோதித்தபோது
ஜோன் ரீட் இன் உள் உடல் அங்கங்கள்
வழமைக்கு மாறாகப் பக்கம் மாறி இருந்தன.
வழமையாக
இடது பக்கம் இருக்கின்ற இதயமும், இரைப்பையும்
வலது புறமாயும்,
வலது பக்கம் இருக்க வேண்டிய ஈரல்
இடப் பக்கமாயுங் காணப்பட்டது.
சுபஹானழ்ழாஹ்.
.
.
இப்போ
இஸ்தான்புல் இற்கு வருவம்.
.
.
மஹ்மூதின் உள் உடல் அங்கங்களும்
வழமைக்கு மாறாகப் பக்கம் மாறி இருந்தன.
இருதயம்
இடம் மாறித் துடித்தது
வலது புறத்திலே.
சுட்டவன் இடப் பக்கம் சுட்டதால
உயிராபத்து ஏற்படவில்லை.
இடது பக்கம் விழுந்த துப்பாக்கிச் சூடு
மஹ்மூதை அதிர்ச்சி இறப்பிற்கு கொண்டுசென்றுவிட்டது.
அழ்ழாஹ்வின் நாட்டம்
மீண்டும் உயிர் வந்தது.
.
.
உயிராபத்தான சந்தர்ப்பங்களிலெல்லாம்
நம்மை மரணத்தில் இருந்து காப்பது
நமக்குரிய மரணம் தான்.
(இதை மீண்டும் மெதுவாக வாசிங்க, அழகாகப் புரியும்.)
அழ்ழாஹ்,
ஆயிரத்தில் ஒன்று என்ற
ஆச்சரியங்களாலும்
அவன் கருணையை வெளிக்காட்டுகிறான்.
காரணமில்லாமல்,
குறை நிறைகள் இல்லை.
.
முஹம்மத்❤ ஸன்ஸீர்.
09.01.2K22, ஞாயிறு.
No comments:
Post a Comment