பிறையாய்ப் பிறக்கும் பௌர்ணமி.
ஒவ்வொரு மரணமும் அவரவர் கழாகத்ரிலே உள்ள ஒன்று.
உயிரோடு இருக்கும் நமக்கு அதிலே நிறையப் படிப்பினைகள் உண்டு.
நாம் தான் படிப்பதில்லை.
பத்தோடு பதினொன்றாகக்
கடந்துகொண்டு தானே இருக்கிறோம்.
பத்தே நிமிஷங்கள் இருந்து யோசித்தால்,
தலைப்பிறை போன்ற மாற்றம் ஒன்று
தனக்கு மிக அருகிலேயே தென்படும்.
அது இறைவனின் அன்பு ❤️
பொத்திப் பாதுகாத்த
பலவீனமான தீக்குச்சிச் சுவாலையொன்றால்
பெரிய அறைக்கே ஒளி கிடைப்பதுபோல
அப்பிறையைப் பின்பற்றும் ஆன்மா ஒரு நாள்
ஆனந்த வெளிச்சம் பெறும்.
ஞாயிறில் இருந்து
திங்கள் ஒளி பெற்று
பௌர்ணமியாய் ஜொலிக்கிறதே.
இல்லையா? அது போல.
இலையுதிர்த்த உள்ளக் கிளைகள்
துளிர்த்துப் பூக்கும், மணக்கும்.
அல்லது அந்தப் பாதையில்
அந்த ஆன்மா பயணித்துப் பலனடையும்.
இன் ஷா அல்லாஹ்.
.
முஹம்மத்❤️ஸன்ஸீர்.
No comments:
Post a Comment