Friday, January 14, 2022

மரித்து வருகின்ற 😔

மோறல் வெலூஸ் (moral values)


ஒரு பரீட்சைக்காக

கொழும்பு சென்று

பஸ்ஸில் ஊர் வந்து சேர்ந்ததும்,

பஸ்ஸை சூழ்ந்து கொள்கின்றன

ஆட்டோப் பூச்சிகள்.


அதிலே ஒருவர் அறிமுகமானவர்

ஆனால், ஏற்கனவே ஒருவர்

அவரது ஆட்டோவில் ஏறியிருந்தார்.


சேர் விட்டுட்டு வாறனே என்கிறார்


சரி போய் வாருங்கள்

காத்திருக்கிறேன் என்கிறேன்.

ஆட்டோ சென்று விடுகிறது


சற்று நேரத்தின் பின்னர்

அடுத்த சவாரியையப் பிடிக்கும் இலக்கி

திரும்பி வந்த ஆட்டோக்களில் ஒன்று

அருகிலே வந்து நிற்கிறது


போறயா?


தெரிஞ்ச ஒருத்த

வாறன் ன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்

நான் அவருக்காக வெயிட் பண்றன் மாமா


எல்லோரும் ஹயர் தான் ஓடுறம்

நேரத்தோட ஊட்ட போறலியா

ஏறுங்க போவம்


இல்லை. அது சரியில்ல மா

நான் காத்திருக்கேன் ன்னு அவர்ட்ட சொல்லிட்டன்

அவர் வந்தா சரியில்ல

நீங்க வேற ஹயர பாருங்க மாமா


போன இடத்தில காசெல்லாம் வாங்கணும்

அவர் வர சுணங்கும்

நீங்க வந்து ஏறுங்க போவம்


......................................................

(நான் அமைதியாகி விட்டேன்


என்ன வாறீங்களா


கொஞ்ச நேரம் பாப்ப

இன் ஷா அல்லாஹ், அவர் வராட்டி போவம்


அவர் வர சுணங்கும்

நீங்க வந்து ஏறுங்களன் போவம்


............................................................

(அந்த இடத்தை விட்டகன்று

சற்றுத் தள்ளிப் போய் நிற்கிறேன்)


மாஷா அல்லாஹ்

சில நிமிடங்களி

அந்த நண்பரின் ஆட்டோ வருகிறது


ஏறிக் கொள்கிறேன்


கொஞ்சம் தூரத்துக்கு போயிட்ட

என்ட வீட்டுக்கு கிட்ட உள்ள ஹயர்தான் சேர் அது

அப்படியே வீட்ட போயிருக்கலாம்

ஆனா, நீங்க காத்திட்டிருப்பீங்களோ ன்னு தான் வந்தன்

சில நேரம்

நிற்கிறேன் என்று சொல்லிட்டு சிலர்

வேற ஆட்டோவுல போயிடுவாங்

வந்து பார்த்தா ஏமாற்றமா இருக்கும்

என்ன செய்யிறவா !! என்றார்


எனக்கு மனதில் ஓடிக்கொண்டிருந்ததெல்லாம் இதுதான்

ஒரு மனிதனுக்கு வாக்கு கொடுத்துடுறம்

ஆனா

அத தெளிவா எடுத்துச் சொல்லியுங் கூ

இன்னொருத்தர் என்னடான்னா

அதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை

அவரு வந்தா வருவாரு

நீங்க என்னோட ஆட்டோல வாங்க ன்னு

நின்னு மல்லுக்கட்டுறார்

தலையில தொப்பி வேற


சரி, பிழை, நியாயம் தர்மம்

அடுத்தவர் நலன் பார்க்கும் "Morailty" எனும் தன்

அவர் மனதில் அப்போது

துளிகூட இருக்கவில்லை


Moral development என்ப

சிறு வயதில் இருந்தே

படிப்படியாக வளர்க்கப்பட வேண்டிய ஒன்று

kohlberg என்பவர்

தனது "moral development theory" மூல

இந்த moral development 

மூன்று (3) கட்டங்களாக நிகழும்

ஆறு (6) படிமுறைகளில் விளக்குகிறார்

(படம் பார்க்க)














இன்னொரு சகோதரருக்குரிய உழைப்பு

வாக்குக் கொடுத்தல்.- பேணுதல்

காத்திருப்பு - ஏமாற்றம்

என்று எவ்வளவோ பேணுதல் விடயங்களை

வெறுமனே 150/= இற்கா

அவர் வெகு சிம்பிளாக இழந்து நிற்கிறார்

என்பதை எண்ணும்போது

மிகக் கவலையாக இருக்கிறது


மேலோட்டமான குழந்தை வளர்பையே

நாம் பெரிதும் பின்பற்றுகிறோம்

உள்ளோட்டமான குழந்தை வளர்ப்பில்

மேலைத்தே

மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின்

கல்வியும், பிள்ளை வளர்ப்பும்

பெரிய வெற்றி காண்கிறது எனலாம்

அதன் தாக்கம்

ஆட்சியிலும், அதிகாரிகளிலும் தென்படும்


வரலாறுகளி

கோத்திரங்களுக்கிடையிலான

குடும்ப உறவுகளுக்கிடையிலான

சமூகங்களுக்கு இடையிலா

வலுவான பிணைப்பிற்கும், கூட்டுறவிற்கும்

அவர்களின் கண்ணியத்திற்கு

இந்த moral values என்பது

பாரிய பங்களிப்புச் செய்திருப்ப

என்னால் காண முடிகிறது


நாம் இன்னு

சுயநலம் மிக்

கல்வி அடைவுகளையே

கனவு கண்டுகொண்டிருக்கிறோம்

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்

28.12.2k21, செவ்வாய்..

நாம் இன்னும்

சுயநலம் மிக்க

கல்வி அடைவுகளையே

கனவு கண்டுகொண்டிருக்கிறோம்.

.

.

முஹம்மத்❤️ஸன்ஸீர்.

28.12.2K21, செவ்வாய்.

No comments:

Post a Comment