"நிறம் மாறும் இதயம்"
.
என்னவோ தெரியலடி.
அவர எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.
.
என்னது புடிச்சிருக்கா? கிறுக்காடி நீயி.
வந்த ரெண்டு நாளிலேயே
முன்னப் பின்ன தெரியாத ஒருத்தர
புடிச்சிருக்கு ன்னு சொல்லுறே. லூசாடி நீயி?
.
அப்டியே வெச்சுக்கோயேன்.
.
ஆமா ....அப்படி என்ன விஷயம்
ஒரே நாள்ல ஒண்ண கவுத்திச்சு?
.
அங்க பாரேன்.
பார்க்க ஸ்மார்ட்டா ரொம்ப ஹென்ட்ஸம்மா இருக்காரு.
கொஞ்சம் எடுப்பா இல்லாட்டி
கண்டுக்காத எத்தனையோ ஆண்களுக்கு மத்தியில
ரொம்ப சுமாரான ஒரு பொண்ணுக்கு
அக்கறை எடுத்து சப்ஜெக்ட்டை
எவ்ளவு தெளிவா எக்ஸ்பிலேன் பண்ணுறாரு.
யாருக்குடி வரும் இந்த மனசு ❤️
.
ஐயோ டைமாயிடுச்சுடி.
வா க்ளாஸுக்கு போவம்.
இத அப்புறம் பாப்பம்.
.
க்ளாஸ் முடிந்து லைப்ரரி போன போது
உள்ளே இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.
அந்த சுமாரான பெண்.
அவளுடன் பேசிவிட வேண்டும்.
.
எக்ஸ்கியூஸ் மீ.
இன்னிக்கு காலையில
நீங்க பேசிக்கிட்டு இருந்தவர் உங்க பிரெண்டா ...?
.
"ஆமா.
ஏன் கேட்குறீங்க?" என்கிறாள் புன்னகையோடு.
.
அவரு பெயர் என்ன?
அவர் இப்போ எங்க இருப்பாரு.
.
"அவர் பெயர் சனா.
அதோ அங்க இருக்காரு" என்று
கண்ணாடி வழியே திசை காட்டினாள்.
.
அழகான, சாந்தமான முகம்.
கண்கள் மூடி ஹெட்செட் போட்டபடி ....
எதையோ ரசித்துக் கொண்டிருந்ததது.
புன்னகை அதைப் பிரதிபலித்தது.
.
"இஃப் யூ டோன்ட் மைண்ட்,
அவரை ஏன் தேடுறீங்க ன்னு தெரிஞ்சுக்கலாமா ...?"
.
அவரு சப்ஜெக்ட்டை ரொம்ப நல்லாவே
விளங்கப்படுத்துறாரு. காலையில பார்த்தன்.
கொஞ்சம் சப்ஜெக்ட் ஹெல்ப் கேட்கணும்.
.
ஓ அப்பிடியா... ?
டெய்லி நடக்குற
பாடங்கள் ல இருக்கிற டவுட்டுகளை கேட்பாரு.
நானும் சொல்லிக் கொடுப்பன்.
மறுநாள் அத ரிப்பீட் பண்ணி சரி பார்த்துக்குவாரு.
நேற்று நான் சொல்லிக் கொடுத்த விஷயங்களை ...
இன்னிக்கு திரும்ப ரிபீட் பண்ணி சரி பார்த்தப்பதான்.
நீங்க பார்த்திருக்கீங்க ன்னு நினைக்கிறன்.
.
அவரு உங்ககிட்ட ரிபீட் பண்ணிக்குவாரா?
.
ஆமாங்க.
படிக்கனும் ன்னு ஆர்வம் இருக்கு.
ஆனா....
அவருக்குப் பார்வை இல்லை.
லெக்ச்சர்ஸயெல்லாம்
சின்ன ரெக்கார்டர் ல
ரெக்கோர்ட் பண்ணி கொடுப்பன்.
ஹெட்செட்ல போட்டுக் கேட்டுக்குவாரு.
பாடங்கள் ல இருக்கிற டவுட்டுகளை கேட்பாரு.
.
ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன்.
.
"எல்லாமே இருந்தும்
நம்மல்ள நிறையப் பேர்
கல்லூரிகல்ள கிடைக்கிற வளங்கள, வாய்ப்புக்கள
சரியாப் பயன்படுத்திக்கிறதில்ல.
சில விஷயங்கள்
இல்லை என்று வரும்போது தான்
நம்மள சுத்தியிருக்கிற எல்லாமே
வளம் ன்னு தெரிய ஆரம்பிக்குது.
அவரையெல்லாம் பார்க்கும் போது ...
எனக்கே ரொம்ப இன்ஸ்பிரேஷனா இருக்கும்.
நான் வர்றேங்க".
சொல்லிவிட்டுக் கிளம்பினாள் அந்த அழகி.
வெள்ளைப் பிரம்புடன்
வெளியே வந்துகொண்டிருந்தான் அந்த அழகன்.
.
காதல் என்று என் நண்பி நினைத்த
அந்தக் "கண்ணியம்"
இப்போது அந்தப் பெண் மீது
பெருமிதமாக இடம் மாறியிருந்தது.
.
சில நேரம் - சில மனிதர்கள்.
காதல் வேறு,
கண்ணியம் வேறு.
.
யாவுங் கலப்பற்ற கற்பனை.
.
முஹம்மத்❤ஸன்ஸீர்.
02.04.2017, SUN.
No comments:
Post a Comment