Friday, January 14, 2022

மற்றவருக்கு நாமளிக்கும் ❤️ கண்ணியத்தில்

மறைந்திருக்கும் நமக்கான கண்ணியம்.

ஒவ்வொரு மனிதனது கண்ணியமும் 

மிக முக்கியமானது.

கண்ணியத்தைக் கொடுப்பதும்

எடுப்பதும் இறைவனின் ஆளுமையாகும்.

மனிதர்கள் ஒரு கருவி மட்டுமே.

நமக்கு என்ன பிடிக்குமோ

அதனை இறைவனிடம் நன்மை நாடி

பிறருக்குக் கொடுக்கின்றவர்களாக

இருப்பதன் பலன் பெரிது.

மறைமுகமாகக் கொடுக்கப்படும் கண்ணியம்

மனதில் மகத்தான மாற்றம் செய்யும்.

.

.

ஒரு முறை 

போர் ஒன்றுக்குச் செல்லு முன் 

பயண அவசரத்தில் 

வுழுச் செய்து கொள்ளாமல்

இரு நபித் தோழர்கள் இருந்ததை 

நபியவர்கள் இனங்காணுறாங்க.


வுழுச் செய்து கொள்ள 

அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காக 

அவர்கள் இருவரையும் அழைத்து

"நீங்கள் இருவரும் சென்று வுழுச் செய்யுங்கள்" 

என்று கூறி 

எல்லோருக்கும் அவர்களை

ரசூலுல்லாஹ் அடையாளங் காண்பிக்கவில்லை.


மாறாக,


"எல்லோரும் வுழுச் செய்துகொண்டீர்கள் அல்லவா?


"ஆமாம் றஸூலுழ்ழாஹ்."


"இருந்தாலும் மீண்டும் ஒருமுறை 

அனைவரும் வுழுச் செய்து கொள்ளுங்கள்." 

என்று எல்லா சஹாபாக்களிடமும் கூறி 

மறைமுகமாக 

அந்த இருவருக்கும் வாய்ப்பளிச்சாங்க.


இது ஒரு மௌலவி நண்பரிடம் இருந்து 

நான் கற்றுக் கொண்டது. 

.

.

பெருமளவு நீரும், 

பெருமளவு நேரமும் 

மீண்டும் செலவாகும் என்றிருந்தும் ....

நபியவங்க அவ்வாறு ஏன் செஞ்சாங்க என்பது 


அப்போது 

அந்த இரு நபித் தோழர்களுக்கும்

இப்போது நமக்கும் 

நன்கு விளங்குகிறது அல்லவா.

நாமும் அந்த வழிகாட்டலில் 

வாழவேண்டியவர்கள் தானே.

அந்த இரு நபித்தோழர்களுக்கும்

நபியின் மீதிருந்த நேசமும், கண்ணியமும்

மேலும் எவ்வளவு உயர்ந்திருக்கும்.

.

.

அழகிய பண்புள்ள, 

நேர்மையான, கண்ணியமான 

ஒரு பிள்ளையின் உருவாக்கம் என்பது

இறைவனின் நாட்டத்துடன்

வயிற்றிலே ஆரம்பித்து

வீட்டிலே வளர்ந்து, 

அயலவர்கள் என்று வியாபித்து 

முன்பள்ளி, மதரஸா என்று

சமூகமயமாகி முன்னேறி  

அப்புறம் தான் 

பாடசாலைக்குள் பலம் பெறுகிறது.

.

முஹம்மத்❤ஸன்ஸீர்.

10.01.2K22, திங்கள்.


Picture Courtesy: Google

படத்தில் "இறைவனின் நாட்டம்"

என்பது இல்லை. 

அது இல்லாமல் ஏனைய எதுவுமில்லை.

No comments:

Post a Comment