Wednesday, January 13, 2016

"க(விதை)"

"க(விதை)"

ஆபிசிலிருந்து சற்றுத் தூரத்திலுள்ள ரெஸ்டுரன்ட் ஒன்றில் பாதிப் பகல் சாப்பாட்டில் மும்முரமாக இருந்தான் ஆரொன். மேசையிலிருந்த போன் சிணுங்கியது. எஸ்எம்எஸ் அலெர்ட். இலக்கம் புதிது ... ஆனா மெசேஜ் ஐ வாசிக்க... வாசிக்க புதிரும் பயமும் பூக்கத் துவங்கியது ஆரொனுக்கு. அப்படி இருந்தது அந்தத் தகவல்.

"வணக்கம்.

நீங்க யாரென்றே எனக்குத் தெரியாது. என்ன யாரென்றும் உங்களுக்குத் தெரியாது. என்னோட பிரச்சனைகளையெல்லாம் என்னச் சுத்தி இருக்கிரவங்ககிட்ட எவ்வளவோ சொல்லியாச்சு ... ச்சும் ... ஒரு பலனுமில்லை. அதனால தான் முன்னப்பின்ன தெரியாத உங்ககிட்ட சொல்லுறன். எழுந்தமானமாக உங்கள் தொலைபேசி இலக்கத்தை தெரிவுசெஞ்சுதான் இந்த மெசேஜ் ஐ நான் உங்களுக்கு அனுப்புறன். உங்கள தொந்தரவு பண்ணதுக்கு என்ன மன்னிச்சிடுங்க.
நான் இப்போ …… தற்கொலை பண்ணிக்கப் போறன்.”
கையும் ஓடல காலும் ஓடல ஆரொனுக்கு ...

என்ன இது ... யார் இது ...? யாரவது நம்மள கலாய்க்கிறாங்களா ...? ஒருவேள இது நிஜமாருந்தா ... !! மெசேஜ் வந்த நம்பருக்கு 20 வாட்டி கோல் பண்ணியாச்சு. நோ ஆன்சர் ..... ஆண்டவனே ... எதுவும் சீரியஸா இருக்கக்கூடாது. ஒஹ் ...

மெசேஜ் வந்த நம்பர மொபைல் நெட்வொர்க் கம்பனியில் வேலை செய்யும் நண்பனுக்கு அனுப்பி அட்ரஸ் வாங்கியாச்சு. பெயர் ப்ரியா, வயது 22 (NIC நம்பர்), பக்கத்து ஊர். கிளம்பி போவதற்கிடையில் ..... "நான் உங்களைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறேன் .. தயவுசெய்து எதுவும் பண்ணாதீங்க ... உன் உங்ககூட கொஞ்சம் பேசனும்  வெயிட் போ மீ ... ப்ளீஸ்" அப்பிடின்னு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு தன் யமஹா பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பியாச்சு ... நேரம் செல்லச்செல்ல நெஞ்சு பக்கு .... பக்கெங்குது.

வீடு வந்தாச்சு. கோலிங் பெல்லை அடிக்க ஒரு 60 வயது மதிக்கத்தக்க பாட்டி.

பாட்டி ப்ரியா …...?
நான்தான் பிரியா .. சத்தியப்பிரியா .... ரிட்டயர்ட் பிரின்சிபல். ஆமா என்ன விஷயம்...?

இல்ல பாட்டி ... உங்க வீட்ல ஒரு 22 வயதுல யாராச்சும் இருக்காங்களா ...?
ஆமா என்னோட பேத்தி ... பிரியங்கா ... ஏன்பா..?

பாட்டி அவங்கள உடனே பார்க்கனும் ….. ஒரு முக்கியமான விஷயம் ... இப்போ எங்க இருக்காங்க...?

அவ இப்போ வீட்ல இல்லப்பா ..... இப்பதான் கிளம்பி எங்கேயோ போனா. எங்க போறான்னு கூட சொல்லல  .... ஏன்பா  என் பேத்திக்கு எதாச்சும் பிரச்சினையா ? கொஞ்ச நாளா அவ சரியாவே இல்ல ... சொல்லுப்பா ... நீ யாரு அவ ப்ரெண்டா ....?

ஆமா பாட்டி …. பிரச்சின ஒண்ணுமில்ல. நீங்க கவலைப்படாதீங்க பாட்டி.

வெளியே வந்து கால் பண்ணிப் பார்க்கலாம்னு போன எடுத்தப்போ .... மீண்டும் ஒரு எஸ்எம்எஸ் - அதே நம்பரிலிருந்து.

“ப்ளீஸ் கம் டு டேபில் 6 @ "Tea அண்ட் Talk" ரெஸ்டூரன்ட் .. அயம் வெய்ட்டிங்  ....”
ஒருவாறு ரெஸ்டூரன்ட் ஐ கண்டுபிடித்தாச்சு. டேபில் 6. ப்ப்பாஹ் .... ஒரு அழகான தேவதை MP3 ப்லேயெரில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தது. ஆரோனைக் கண்டதும் ...
                                               
ஹல்லோ …. அயம் ப்ரியா, இட்ஸ் நைஸ் டு மீட் யூ ஆரோன். அப்பிடீன்னு கைகுழுக்கியது அந்த தேவதை .... அழுதிருப்பாள் போல, கண்கள் இரண்டும் சோகத்தில் கழுவப்பட்டிருந்தது. இருந்தாலும் அழகாக இருந்தது. அந்த அமைதியில் ஒரு தெளிவு தெரிந்தது. பிடித்திருந்தது.

ஹாய் .. அயம் ஆரொன். நைஸ் டு மீட் யூ டூ. ஏங்க நீங்கதான் போன்ல சூசைட் பண்ணப்போறன்னு மெசேஜ் போட்டீங்களா ...? எதுக்கு அப்பிடியொரு மெசேஜ் போட்டீங்க ... இங்க வந்து பார்த்தா ... நீங்க பாட்டுக்கு ஜாலியா MP3 ப்லேயெரில் பாட்டு கேட்டுக்கிட்டிருக்கீங்க ...? என்ன விளையாடுறீங்களா..?

ரெஸ்டுரன்ட் ... கொஞ்ச நேரம் ரெண்டுபேரும் அமைதியாக இருக்கிறார்கள்.

கூல் .... கூல் ... சொல்றேன். நான் சும்மா ஜாலிக்குப் பண்ணேன்.
பளார் ன்னு ஒரு அறை விழுந்தது. நிஜத்திலில்லை .. ஆரோனின்  நெனப்பில் ... தேவதையை அறைய முடியுமா..? இல்லல்ல ...

என்னது ஜாலிக்கா …? கொஞ்ச நேரம் என் மனசு என்ன பாடுபட்டதுன்னு தெரியுமா உங்களுக்கு ....? முதன்முறையா 120 km/h வேகத்துல பைக் ஓடியிருக்கன். சாப்பிட்ட சாப்பாடு பாதியிலேயே இருக்கு, தண்ணி குடிக்கல,  காசுவேற கொடுக்கல்ல. இதுக்கு என்னங்க அர்த்தம் …. சூயிசைட் என்குறது உங்களுக்கு விளையாட்டாப் போச்சா ... ஒரு உயிரோட விளையாடுறது ... உங்களுக்கு ஜாலியா ...? ஒரு உயிரோட மதிப்பு என்னான்னு தெரியாதா உங்களுக்கு .... ?

அப்போ ஒரு உயிரோட மதிப்பு என்னான்னு உங்களுக்கு தெரியுமா?  உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயமா... மத்தவங்க உசிரு பெரிசு உங்க உசிரு சிறிசா... ஆஹ்  சொல்லுங்க ... ? ன்னது தேவதை.

என்ன சொல்லுறீங்க ... ஒன்னுமே புரியல ....!
ஏன் நீங்க தற்கொலை பண்ணிக்கப் போகல .. அப்புறம் ஐடிஆவ மாத்திக்கலயா ....? ன்னதும் தூக்கிவாரிப்போட்டது ஆரோனுக்கு.

இதெல்லாம் உங்களுக்கு எப்பிடிங்க தெரியும்...? என்ன முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா..? எக்சுவலி யாருங்க நீங்க ....?

நான் உங்ககிட்ட ஒன்னு காமிப்பன். ஆனா அத நீங்க மறுபடியும் என்கிட்டயே திருப்பித் தரனும். ஓகே ன்னா .. காட்டலாம்.

சரி கொடுங்க .....
இது உங்களோடதான்னு பாருங்க.
ஆமாங்க என்னோடதுதான். தொலச்சிட்டன் ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தன். இது எப்பிடி உங்ககிட்ட ....?

பப்ளிக் லைப்ரேரில வாசிக்க ஒரு புக் எடுத்துட்டு வந்தன். அதுக்குள்ளே நீங்க எழுதின தற்கொலைங்கிற கவிதை இருந்திச்சு. ரொம்ப இன்டெரெஸ்டிங்கான கவிதை அது. நீங்களே உங்களைப்பத்தி எழுதியிருந்தீங்க. நீங்க தற்கொல செய்யப்போனது, அப்புறம் மாத்திர வாங்கிவந்த பக்கட்ல ஒரு கவிதை இருந்தது, அத வாசிச்சு நீங்க மனச மாத்திக்கிட்டது, அதேபோல உங்களைப் பாதிச்ச கவிதையோட உங்க உணர்வையும் கலந்து மத்தவங்க மன மாற்றத்துக்காக ரொம்ப சூப்பெரா எழுதியிருக்கீங்க ...

புக் ல இருந்த உங்க  லைப்ரேரி நம்பெர் மூலமா லைப்ரேரியன்கிட்ட இருந்து  உங்க  டீடைல்ஸ் எடுத்துக்கிட்டன். எனக்கு கவிதைன்னா ரொம்ப புடிக்கும். உங்க கவிதைய பார்த்தனா , ரொம்ப புடிச்சுப்போச்சு. நிஜத்துல உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சு. ஆனா அதோட … உண்மையிலேயே நீங்க உயிரை மதிக்கிரவரா ன்னு பார்க்கனும்னும் தோணிச்சு அதான் அப்பிடியொரு மெசேஜ் போட்டன். அயம் சொரி. பை த வேய் ... ஒரு மெசேஜ் தானேன்னு சும்மா விட்டுடாம ... வீடுவரைக்கும் தேடிவந்ததுக்கு ரொம்ப நன்றி. அயம் சோ ஹப்பி டு மீட் சச்ச நைஸ் பேர்சன் லைக் யூ.

தேன்க் கோட். அப்போ நிஜமாவே நீங்க சூயிசயிட் பண்ணிக்கப்  போகலையா?

நிஜமாவே ட்ரை பண்ணன் ... ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒருதடவ சூயிசைட் பண்ண ட்ரை பண்ணன். எக்சுவலி உங்க கவித தான் என் மனசக்கூட மாத்திச்சு. ஐ ஷுட் தேன்க் யூ போ தட் ஆரொன். ஐ பீல் பெட்டர் நவ். தேன்க்  யூ.

மீண்டும் சைலண்ட்.

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தாங்க. இட்ஸ் ஓகேங்க ... வெரி நைஸ் டு மீட் யூ.... அப்புறம் என்னோட நோக்கத்த நீங்க நெறவேத்தி வெச்சதுக்கு ரொம்ப நன்றி. உங்க மெசேஜ பார்தேனா ... அவசரமா கெளம்பிட்டேன். ஆபிசுக்கு வேற இன்போர்ம் பன்னல.  அப்போ நான் கெலம்புறன். சி யூ......

நீங்க ஏன் தற்கொலை செஞ்சுக்க ட்ரை பண்ணீங்க … உங்க ஸ்டோரிய சொல்லவேயில்லையே ....?
முதன்முதலா இன்னிக்கித்தான் மீட் பண்ணியிருக்கோம். நீங்க ஏன் தற்கொலை பண்ணப்போனீங்க ன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமாயிருக்கு.  ஆனா இது சரியான நேரமான்னு சரியா தெரியல எனக்கு. இன்னொருமுறை சீக்கிரம் சிந்திப்போம் .... அப்போ சொல்றன் ஓகே. டேக் கெயார். இனி அந்த மாதிரி முடிவுக்கெல்லாம் போகாதீங்க. போகமாட்டீங்கன்னு நம்புறன். எதுன்னாலும் போன் பண்ணுங்க. நோ ப்ரோப்ளம்.

ஓகே . டேக் கெயார் ..... கீப் இன் டச் ..... Bபாய். (ரொம்ப நல்லவன்.)
ஒன்த வே பெக் டு ஆபீஸ் ……
ப்ரியா, நான் உன்னக் கல்யாணம் பண்ணிக்கிட்டா லைfப்ல நீ சந்தோசமா இருப்ப ன்னு தோணுது எனக்கு .... என்ன சொல்ற ... ? டேய் ஆரொன் ... ரோட்டப் பார்த்து பைக்க ஓட்ரா இது அவனோட மனசு.

யேய் ...யேய்  .... ஸ்டாப் ... ஸ்டாப் .... அம்மா .....
தடார் .... டடம் .. க்ரீச் ...... டொம் .... டக் ....டக் .... ....டக் .... ....டக் .... க்…..ரீ……..ச்.

யேய் ... எல்லாரும் ஓடி வாங்க .... ஓடி வாங்க .... காப்பாத்துங்க ..... சீக்கிரம்... சீக்கிரம் ..... யாராச்சும் அம்புலன்சுக்கு கோல் பண்ணுங்க .... நீ போலிசுக்கு கோல் பண்ணு…

அக்சிடண்ட் ... நேருக்கு நேர்  ஒரு மோட்டார் சைக்கிள் vs ஆட்டோ.

எல்லோரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வீதியில் கிடந்த ஒரு மொபைல் போன் சிணுங்குகிறது.

எஸ்எம்எஸ்.: "ஐ லவ் யூ அண்ட் மிஸ் யூ டியர்”.

ஹாஸ்பிட்டலில் 2 மணித்தியாலங்களின் பின் .... "இந்தாங்க சேர் உங்க மொபைல் போன். உங்க போனும், பர்சும் ரோட் ல விழுந்து கிடந்துச்சு. உங்க வைப் மெசேஜ் பண்ணியிருக்காங்க. அந்த நம்பருக்கு கோல் பண்ணி தகவல் சொல்லிட்டன். டென்சனா இருப்பாங்க நீங்களும் உடனே கோல் பண்ணி  பேசுங்க. டேக் கேயார்.

போனைக் கொடுத்துவிட்டு  புறப்பட்டான் தனக்கு முன்னால் நிகழ்ந்த அந்த எக்சிடன்ட் இல் மயிரிழையில் உயிர் தப்பிய ஆரொன். ப்ரியா ஆரொனக் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவன் லைfப்ல சந்தோசமா இருப்பான் னு அவளுக்கும் ஏதோவொரு பாயிண்ட்ல தோணனும் ல. தோணும் .. ஏன்னா .. ஒரு கவிதை அவர்கள் இருவரின் மனதிலும். நல்லதொரு விதையை விதைச்சிருக்கு. ....... அது இன்னும் வளரும்.

கவிதை ஒரு விதை.
முற்றும்

No comments:

Post a Comment